Home செய்திகள் வட மாகாண சட்டத்தரணிகளுக்கு ஆதரவாக கிழக்கிலும் போராட்டம்!

வட மாகாண சட்டத்தரணிகளுக்கு ஆதரவாக கிழக்கிலும் போராட்டம்!

110
0

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலை விவகாரத்தை கண்டித்தும், வட மாகாண சட்டத்தரண்இகளுன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று செவ்வாய்க்கிழமை (24) மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு முன்னாள் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தலைவர் என்.நாராயனப்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றம் மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் தொழில் நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களை சோர்ந்த 40 மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னாள் ஒன்றினைந்தனர்.

இதில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் நீதிமன்ற கட்டளையை அவமதிக்காதே, சட்டத்தின் மூலம் யாவரும் சமம், நீதிக்கே சவாலா, ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே நீதி , தலையிடாதே நீதித்துறையில் தலையிடதே  போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்பாட்டத்தினால் அனைத்து நீதிமன்ற  திறந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் செயலிழந்ததுடன் இன்று இடம்பெறவிருந்த திறந்த நீதிமன்றத்தில் வழக்குகள் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பால் அங்கும் திறந்த நீதிமன்ற செயற்பாடுகள் செயலிழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.