
நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் புறந்தள்ளி பௌத்த பிக்குவின் உடல் அடக்கம் செய்யப்பட்டமை, சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டமை என்பவற்றை கண்டித்து முல்லைத்தீவில் ,தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் சட்டதரணிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்றைய இப் போராட்டத்தில் நீதியரசரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனும் மக்களோடு இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
மிகவும் குறுகிய கால இடைவெளியினுள் பெருமளவு மக்கள் திரண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை அவமதித்தவர்கள், அதற்குத் துணை நின்றபொலிஸாரை நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.