Home செய்திகள் நிஜாப் மற்றும் புர்ஹா போன்ற முகத்தை மூடும் ஆடைகள் மீதான தடைகள் தற்காலிகமாக நீக்கம்:

நிஜாப் மற்றும் புர்ஹா போன்ற முகத்தை மூடும் ஆடைகள் மீதான தடைகள் தற்காலிகமாக நீக்கம்:

123
0

இலங்கையில் அவசரகால நிலை நடைமுறையில் இல்லாததன் காரணமாக நிஜாப் மற்றும் புர்ஹா போன்ற முகத்தை மூடும் ஆடைகள் மீதான தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்குத்துறைக்கான பிரதிக்காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் விவகார மற்றும் தபால் சேவைகள் துறை அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தொடுத்த கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முகத்தை மூடிய ஆடைகளின் மீதான தடைகளை நீக்கிய கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து முகத்தை மூடும் ஆடைகளுக்கான தடை கொண்டு வரப்பட்டது.