
தனது பதவிக்காலம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடத்தில் இருந்து 5 வருடங்களாக குறைக்கப்பட்டது. ஆனால் அந்த திருத்தம் 2015 மே 15ஆம் திகதியே நிறைவேற்றப்பட்டுள்ளதால் அவரின் பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது என்ற குழப்ப நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே உயர் நீதிமன்றம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களே என அறிவித்துள்ளது. ஆனால் அவரின் பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது என்பதனை கூறவில்லை. இதனால் ஜனாதிபதி அதுபற்றி கோரவுள்ளார்.
இவ்வாறாக நீதிமன்றத்திடம் கோரும் பட்சத்தில் பதவிக்கலாம் அடுத்த வருடம் மே 15ஆம் திகதியே முடிவடைவதாக உயர்நீதிமன்றம் அறிவித்தால் ஜனாதிபதி தேர்தல் மார்ச் மாதத்தின் பின்னர் வரை ஒத்திவைக்கப்படலாம்.