Home செய்திகள் அவசரமாக கூடுகிறது ஐக்கிய தேசிய கட்சி – வேட்பாளருக்கான இறுதிக் கூட்டமா?

அவசரமாக கூடுகிறது ஐக்கிய தேசிய கட்சி – வேட்பாளருக்கான இறுதிக் கூட்டமா?

124
0

ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் 16 இல் நடாத்துவதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தமது கட்சியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவத்உ தொடர்பில் ஆராய ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இக் கூட்டத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், சஜித் பிரேமதாசவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு கருஜயசூரியவை வேட்பாளராகவும், பிரதமர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படலாம் எனவும் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்கவே தொடரும் வகையில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.