Home செய்திகள் யாழ் மாநகர சபையின் நிகழ்ச்சி நிரலில் திலீபனின் நினைவு நிகழ்வு!

யாழ் மாநகர சபையின் நிகழ்ச்சி நிரலில் திலீபனின் நினைவு நிகழ்வு!

128
0

எதிர்வரும் காலங்களில், யாழ்ப்பாண மாநகர சபையின் வருடாந்த நிகழ்ச்சி நிரலின் கீழ், தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். அத்துடன், மிக விரைவில் திலீபனின் நினைவு தூபியும் நவீன முறையில் அமைக்கப்படுமெனவும், அவர் கூறினார்.

ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினரும், டக்ளஸ் தேவானந்தாவிற்கு மிக நெருக்கமானவருமான யாழ்ப்பாண மாநகரசபையின் தற்போதைய மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் இன் இக் கருத்து எதிர்வரும் தேர்தலை மையப்படுத்திய வாக்கு வங்கியை நோக்கியதாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ மேயர் கூறிய விடையம் நடந்தால் ஒட்டுமொத்த தமிழினமும் மகிழ்ச்சியடையும் என்பது உண்மை.