Home செய்திகள் ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்க கூடாது: ரணில்

ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்க கூடாது: ரணில்

108
0

ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்க கூடாது என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“மக்களின் ஆதரவு இல்லாத சில அரசியல்வாதிகள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களில் சிலர், இம்முறை ஜனாதிபதித் தேர்தலை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று நாம் அறிந்தோம். முகவரியற்ற இந்த அரசியல்வாதிகளின் வேண்டுகோளைத் தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும்.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இம்முறையும் விடக்கூடாது. எனக் கூறியுள்ளார்.