Home உலக செய்திகள் மெக்சிக்கோவில் – 119 கறுப்பு பொதிகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்!

மெக்சிக்கோவில் – 119 கறுப்பு பொதிகளில் மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள்!

159
0

மெக்சிக்கோவில், துர்நாற்றம் காணப்படுவதாக உள்ளுர் மக்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து கிணறு ஒன்றை சோதனையிட்டவேளை 119 கறுப்புபைகளில்இந்த உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பல வருடங்களாக கைவிடப்பட்ட மரங்கள் அடர்ந்த பாதி கட்டிமுடிக்கப்பட்ட கட்டிமொன்றில் காணப்பட்ட கிணற்றிக்குள்ளேயே இந்த உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

ஜலிகோ மாநிலத்தின் தலைநகரமான குவடலஜராவில் இவ்வருடம் 15 மனித புதைகுழிகளிற்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு மெக்சிக்கோவின் மிகமோசமான போதைப்பொருள் கும்பலான ஜலிஸ்கோ புதிய தலைமுறை  என்ற அமைப்பு இங்கிருந்தே இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.