Home செய்திகள் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி யாழ் வருகை!

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி யாழ் வருகை!

165
0

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜம் மேற்கொண்டுள்ளார்.

நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒருநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் தொனிப் பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிய வங்கியின் 13,500 பில்லியன் ரூபா நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினையும் நாட்டிவைத்தார்.

குறித்த நிகழ்வில் விவசாயம் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ஹரிசன் பெர்ணான்டோ மற்றும் வட.மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ சுமந்திரன், த.சித்தார்த்தன், அங்கஜன் இராமாநாதன், மஸ்தான் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், நீரியல்வளத்துறை அதிகாரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் யாழ்.வடமராட்சி, கப்பூதூவெளி, அந்தணத்திடலில் நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார். இன் நன்னீர் திட்டம் 6×10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.