Home செய்திகள் புலிகள் கூறியே காங்கிரஸில் இணைந்ததாக தெரிவித்த திருமாவளவன்!

புலிகள் கூறியே காங்கிரஸில் இணைந்ததாக தெரிவித்த திருமாவளவன்!

156
0

தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியே தான் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து கொண்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் பிரித்தானியர் தலைநகர் லண்டனின் ஈட்டம் பகுதியில் அமைந்துள்ள ட்றிட்டினிட்டி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் கூறுகையில்,

”2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளின் சேரலாதன் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘எல்லோரும் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? எதற்காகக் காங்கிரஸை எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் பேசப்பேச எங்கள் மேல் எக்ஸ்ட்ராவாகக் குண்டுகளைப் போடுகிறார்கள்..நீங்கள் ஓட்டுவாங்க நாங்கள் பலியாக வேண்டுமா’ எனக் கேட்டுத் திட்டிவிட்டு, தொலைபேசியை புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசனிடம் கொடுத்தார்.

நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார். அது ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்’ என்பதாகும்.

தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்“ என்று அவர் தெரிவித்தார்.

இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தைக் குழப்ப முயன்றவர்களை நீண்ட இளுபறிகளின் பின் மண்டபத்தை விட்டு வெளியேற்றிய பின்னரே, அது தொடர்ந்து நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.