
இலங்கை தேசிய கபடி அணியில் இடம்பிடித்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மாணவிகள் தென்கொரியாவில் நடைபெறவுள்ள தேசிய போட்டிகளில் பங்குபற்றுவதற்காக அங்கு செல்லவுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி செல்வி பிரியவர்ணா, இளவாலை கான்வென்ட் பாடசாலை மாணவி டிலக்சனா ஆகிய இருவருமே தேசிய கபடி அணியில் இடம்பெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.