Home செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டோர் பிராந்திய அலுவலகம் இன்று யாழில் திறப்பு!

காணாமல் ஆக்கப்பட்டோர் பிராந்திய அலுவலகம் இன்று யாழில் திறப்பு!

114
0

யாழ்மாவட்டத்திற்கான காணாமல்  ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இன்று (24/08) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலக திறப்பிற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை வேளை மிகக் குறைந்த நபர்களுடன் அவசர அவசரமாக மேற்படி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.