Home முக்கிய செய்திகள் எழுக தமிழ் பேரணியில் தமிழர்கள் என்ற அடிப்படையில் சேர்ந்த்ஹு பயனிக்க வருமாறு விக்னேஸ்வரன் அழைப்பு:

எழுக தமிழ் பேரணியில் தமிழர்கள் என்ற அடிப்படையில் சேர்ந்த்ஹு பயனிக்க வருமாறு விக்னேஸ்வரன் அழைப்பு:

167
0

எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற ரீதியில் கொள்கை அடிப்படையில் அனைவரும் சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டுமென்றும் தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

எழுக தமிழ் அடுத்தமாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற எழுக தமிழ் பேரணி 2019 ஆம் ஆண்டில் கூடிய மக்களின் பங்கு பற்றுதலோடு நடைபெற வேண்டிய நிகழ்வாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் …

அதற்கு காரணம் தற்போதைய காலம் பல விதத்திலும் நாட்டில் ஒரு கொந்தளிப்பு நிலைமையை அரசியல் ரீதியாக ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த வேளையில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென்று கேட்க வேண்டிய சந்தர்ப்பம் வந்துள்ளது. ஆகையினால் அந்தச் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் தமிழ் மக்களின் வாக்கைப் பெற பலரும் பல பிரயத்தனத்தில் தற்போது ஈடுபட்டிருக்கின்றார்கள். ஆகையினால் நாங்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்தை வெளியிட்டால் தான் எங்களுக்கு எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய சந்தரப்பம் சூழ்நிலை பிண்ணணி அதற்கேற்ற போல ஏற்படும். ஆகவே 2019 எழுக தமிழ் விமர்சையாக பலரது பங்குபற்றுதலுடன் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அதே வேளையில் எழுக தமிழ் பேரணியில் கட்சிகள் என்ற முறையில் இல்லாமல் தமிழர்கள் என்ற முறையில் நாங்கள் ஒன்று சேர்கிறோம். எந்தெந்தக் கட்சிகள் வருகின்றார்களோ அவர்கள் யாவரும் எங்களுடன் சேர்ந்து அதிலே ஈடுபட முடியும். ஆனால் சில கட்சிகளை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சென்ற தடவையும் ஒரு கட்சி வந்த போதும் ஒரு இடத்தில் இருந்த திரும்பிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆனால் எங்கள் கொள்கைகளை அதாவது தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்கும் எந்தக் கட்சியும் எங்களுடன் சேர்ந்த பயணிக்கலாம். ஆகவே கட்சிகள் என்ற முறையில் யார் யார் வருகிறார்கள் என்பதையும் பார்க்க கொள்கை என்ற அடிப்படையில் யார் யார் எங்களுடன் பங்குபற்றுகிறார்கள் என்பது தான் முக்கியம்.
கொள்கைகள் தமிழ் மக்களின் வருங்காலத்தைப் பற்றியது. அதனை எவ்வாறு அமைக்க வேண்டும். அரசியல் ரீதியாக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்போதைய காலத்தில் எங்கள் மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை எவ்வளவு காலத்தில் தீர்க்க முடியுமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பது சம்மந்தமாக எல்லாம் நாங்கள் அந்த எழுக தமிழ் நிகழ்வில் எடுத்துக் கூற இருக்கிறோம்.

ஆகவே கட்சி என்ற ரீதியில் இல்லாமல் தமிழ் மக்கள் என்ற ரீதியில் சகலரும் கொள்கை அடிப்படையில் எங்களோடு சேர்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என விக்கினேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.