Home செய்திகள் ஆழியவளை கடலில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த C4 வெடிமருந்து மீட்பு!

ஆழியவளை கடலில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த C4 வெடிமருந்து மீட்பு!

120
0

யாழ், வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பகுதியில், நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ எடையுள்ள C4 வெடிமருந்து நிரம்பிய பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து நேற்றைய தினம் நடத்திய தேடுதல் நடவடிக்கையிலேயே மேற்படி வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கடற்புலிகளால் குறித்த வெடிமருந்து நீருக்கடியில் மறைத்துவக்கப்பட்டிருக்கலாம் எனவும் தமக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலின் போது குறித்த பொதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.