Home தாயக செய்திகள் எழுக தமிழ் நிகழ்விற்கான முதற்கட்ட பிரச்சாரம் நல்லூரில் இன்று ஆரம்பம்!

எழுக தமிழ் நிகழ்விற்கான முதற்கட்ட பிரச்சாரம் நல்லூரில் இன்று ஆரம்பம்!

134
0

எதிர்வரும் 16.09.2019 அன்று நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அணிதிரட்டும் முகமாக இன்று காலை யாழ் நல்லூர் ஆலய முன்பாக மற்றும் யாழ் பஸ் தரிப்பிட நிலையங்களில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் கைதுகள், கொலைகள், மர்ம சாவுகள், சிங்களக் குடியேற்றம், சுதந்திரமாக எந்த நிகழ்வுகளையும் தமிழர்கள் செய்யமுடியாத சூழல் என தொடர்ந்து நீடித்துவரும் சூழலில் இனப்படுகொலையை முன்னின்று நடாத்திய முக்கிய நபர்களுள் ஒருவரான கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பது மிக மிக ஆபத்தான சூழலாக அமைந்துள்ளது.

இவ் வேளையில் ஜனாதிபதி தேர்தல் முன்பாக வரலாறு காணாத மக்கள் எழுச்சியோடு “எழுக தமிழ்” நிகழ்வு நடைபெற வேண்டியதும், அதனூடாக சிங்கள இனவாதிகளுக்கும், சர்வதேசத்திற்கும் தமிழர்களின் தேவையையும், கண்டனத்தையும் இரத்து சொல்லவேண்டியது அவசியமாகிறது.

இச்சூழ் நிலையிலேயே சர்வதேச போர்குற்ற விசாரணையை நடாத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய், வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து  போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி “எழுக தமிழ்” நிகழ்வு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.