Home முக்கிய செய்திகள் கோட்டபாயவை சந்தித்தார் இனப்படுகொலையை கண்டுகொள்ளாத யசூஷி அகாஷி!

கோட்டபாயவை சந்தித்தார் இனப்படுகொலையை கண்டுகொள்ளாத யசூஷி அகாஷி!

110
0

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி  சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட கொடிய போரின் போது பல வழிகளில் யசூஷி அகாஷி மகிந்த அரசாங்கத்திற்கு உதவியிரு தமையும், அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மக்கள் படுகொலைகளை பெரிய விடையமாக்காது பாதுகாப்பதில் ஐ.நா வில் யசூஷி அகாஷி பெரும் பங்காற்றியிருந்தார் என்றும் நம்பப்படுகிறது.

அதனை உறுதி செய்யும் முகமாகவே ஜானாதிபதி வேட்பாளராக கோட்டபாய வின் பெயர் அறிவிக்கப்பட்டதும் இலங்கை விஜம் மேற்கொண்டு கோட்டபாயவிற்கும், மஹிந்த விற்கும் வாழ்த்துக்களையும், தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.