Home செய்திகள் மஹிந்த கூட்டணியில் இணைந்தது ஈ.பி.டி.பி

மஹிந்த கூட்டணியில் இணைந்தது ஈ.பி.டி.பி

162
0

ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பதென நாம் தீர்மானம் எடுத்துள்ளதாக, ஈபிடிபி அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பின் பின்னரே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கடந்த காலங்களில் ஒட்டுக்குழுவாக செயற்பட்டு பல நூற்றுக்கணக்கான தமிழகளின் படுகொலைக்கும், தமிழீழ விடுதலை போராட்டத்தை முடக்கவும் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு துணை நின்ற டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி மகிந்த குழாமிற்கே ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தாலும் அதனை உத்தியோக பூர்வமாக இன்று அக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.