Home செய்திகள் ஜனாதிபதியால் இராணுவ தளபதிக்கான நியமன கடிதம் அனுப்பி வைப்பு!

ஜனாதிபதியால் இராணுவ தளபதிக்கான நியமன கடிதம் அனுப்பி வைப்பு!

138
0

ஐ.நா மனித உரிமை ஆணையகம் உட்பட சில மேற்கு நாடுகளின் அழுத்தங்கள், மற்ரும் உள் நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்புகளையும் தாண்டி சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக பொறுப்பேற்குமாறு நியமனம் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன அனுப்பியுள்ளார்.

இவ் நியமன கடிதம் சவேந்திரசில்வாவிற்கு இன்று காலை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், விரைவில் உத்தியோகபூர்வமாக பதவியை பொறுப்பேற்பார் எனவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா இராணுவத்தில் சேர்ந்த சவேந்திர சில்வா இறுதிக்கட்ட பொறி பொது மஹிந்த ராஜபக்சவிற்கும், கோட்டாபாய ராஜபக்சவிற்கும் விசுவாசமாக செயற்பட்டிருந்தார் என்பதோடு பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் படுகொலைக்கு காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் மட்டும் அன்றி வெளி நாடுகளிலும் அவருக்கு எதிரான கடுமையான எதிர்ப்புக்கள் இருக்கும் நிலையில் இலங்கையின் 23 வது இராணுவத் தளபதியாக இன்று மைத்திரிபால சிறீசேனவால் நியமிக்கப்பட்டுவது குறிப்பிடத்தக்கது.