Home முக்கிய செய்திகள் சர்ச்சைக்குரிய சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு பல்முனை தடைகள்!

சர்ச்சைக்குரிய சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு பல்முனை தடைகள்!

123
0

இறுதிக்கட்ட போரின் போதும், போரின் முடிவிலும் பொதுமக்களையும், சரணடைந்த போராளிகளையும் ஈவிரக்கமின்றி கடும் சித்திரவதைகளின் பின் படுகொலை செய்தார் எனும் சர்ச்சைக்குரிய சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக பதவி உயர்வு செய்யும் மைத்திரியின் திட்டத்திற்கு பல்முனைகளிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படுவதற்கு, ஜனாதிபதி சிறிசேன தனது சொந்த கட்சியின் உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளதோடு மட்டுமல்லாது ஐ.தே.க.வும் இந்த விவகாரத்தில் முரண்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நேற்று இரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. இவ்வாறான நிலையில், புதிய இராணுவத் தளபதி நியமிக்கப்படுவதில் தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.