Home செய்திகள் தீர்விற்கான உறுதி மொழியை மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் வழங்கும் கட்சிக்கே எமது ஆதரவு.

தீர்விற்கான உறுதி மொழியை மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் வழங்கும் கட்சிக்கே எமது ஆதரவு.

143
0

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் முதற்கொண்டு நீண்டகால அரசியல் பிரச்சனைக்கான தீர்விற்கான உறுதி மொழியை மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்துடன் வழங்கும் கட்சிக்கே எமது ஆதரவு என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதே வேளை, கோட்டாபாய ராஜபக்ச கடும் போக்காளர் என்றும், அவர் சிங்கள நாடு என்ற கொள்கை உடையவர் என்றும் கூறிய க.வி.விக்னேஸ்வரன், கோட்டபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் அதன் பின் தமிழர்களுக்கு இருண்ட யுகமே எனவும் எச்சரித்தார்.