Home செய்திகள் வறட்சியால் இரணைமடு நீர் விநியோகம் பாதிப்பு!

வறட்சியால் இரணைமடு நீர் விநியோகம் பாதிப்பு!

121
0

வடக்கில் நிலவும் கடும் வறட்சியால் இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் 9 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதனால் குழாய் வழி மூலமும், நீர் தாங்கிகள் மூலமும் இரணைமடுக் குளத்தில் இருந்து மக்கள் பாவனைக்காக விநியோகிக்கப்பட்டு வந்த நீர் அரைவாசியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் 17 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் நவரூபன் தெரிவித்தார்.