
காணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தில் குடியமர்த்துவதற்கான வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் 7.5 ஏக்கர் காணியை சில முஸ்லிம் வர்த்தகர்கள் வழங்கியுள்ள நிலையில், காணியற்ற நிலையில் உள்ள முஸ்லிம்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை அப் பகுதியில் உடன் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.
தமிழர் தாயகம் இவ்வாறான பல திட்டங்கள் மூலம் பறிபோய்க் கொண்டிருக்கும் சூழலிலும் எத்தனையோ தமிழ் செல்வந்தர்கள், கோடீஸ்வரர்கள் ஏன் தமிழர் நிலங்களை வேற்றினத்தவர் அபகரிக்க விடாது தமது நிலங்களாக கூட வாங்கி தமிழர் தாயகத்தை பாதுகாக்க முன்வரவில்லை என்பது வேதனையான விடையமாக உள்ளது.