Home செய்திகள் மாவட்ட வைத்தியசாலையாக தரமுயதும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை!

மாவட்ட வைத்தியசாலையாக தரமுயதும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை!

259
0

யாழ்- பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை விரைவில் மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இப் புதிய கட்டடம் நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியில் 1,180 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன் உட்பட வைத்தியர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.