Home செய்திகள் சவுதியில் தடுப்பில் இருந்த 15 பணிப்பெண்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

சவுதியில் தடுப்பில் இருந்த 15 பணிப்பெண்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.

129
0

சவுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 பணிப்பெண்கள் சவுதியிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டினால் நாட்டிற்கு மீள அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த பணிப்பெண்களுக்கு 1,90,82,000 ரூபா இழப்பீடும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு தொழிலுக்கு செல்வதற்கு முன்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தமை காரணமாகவே பணியாளர்களுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க முடிந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.