Home செய்திகள் புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை மக்களிடம் கையளித்தார் பிரதமர் ரணில்:

புனரமைக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை மக்களிடம் கையளித்தார் பிரதமர் ரணில்:

106
0

29 ஆண்டுகளின் பின் மக்கள் பாவனைக்காக புனரமைப்பு செய்யப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திறந்து வைத்தார்.

1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பித்த போர்ச் சூழல் காரணமாக மக்கள் தம் இடங்களை விட்டு வெளியேறியிருந்ததை தொடர்ந்து கடந்த 28 ஆண்டுகளாக இராணூவக் கட்டுப்பாட்டில் இருந்த வலிகாமத்தின் பல கிராமங்களில் ஒன்றான மயிலிட்டி கிராமத்தின் ஒரு பகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்கள் பாவனைக்காக விடப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவினால் 150 மில்லியன் ரூபா செலவில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகள் முடிவுற்ற நிலையிலேயே இன்று அதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்துவைத்து மக்களிடம் கையளித்துள்ளார்.

அத்தோடு, மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றையும் பிரதமர் இன்று திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விகிரமசின்க்கவுடன், வடமாகாண ஆளுநர், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பெருந்தொகையனோர் கலந்துகொண்டிருந்தனர்.