Home செய்திகள் சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய்…? திருமலையில் மக்கள் போராட்டம்!

சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய்…? திருமலையில் மக்கள் போராட்டம்!

106
0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றுகூடி இன்று திருகோணமலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்.

திருகோணமலையில் அமைந்துள்ள மனித உரிம ஆணயகம் முன்பாக கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 10 வருட காலமாகியும் தமக்கு நீதி கிடைக்கவில்லை. எமது பிள்ளைகள் எங்கே …? அவர்களுக்கு என்ன ஆயிற்று …? என்ற எதுவுமே தெரியாது ஏக்கத்தோடு அலைந்து கொண்டு இருக்கிறோம். ஈஇனியும் காலம் தாழ்த்தாமல் சர்வதேசம் இனியாவது தலையிட்டு எம் உறவுகள் தொடர்பான விபரங்களை வெளிக்கொணர முன்வர வேண்டும் என கேடுக் கொண்டனர்.

வெள்ளை வானில் கொண்டு செல்லப்பட்டோர் எங்கே…?

விசாரணைக்காக நாங்களே அவர்கள் கையில் கொடுத்த எம் பிள்ளைகள் எங்கே…?

கடத்தப்பட்ட எம் உறவுகள் எங்கே…?

காணாமல் போனோர் அலுவலகம் கண் துடைப்பா…?

சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிற்றாய்…?

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பக்கச் சார்பற்ற நீதி விசாரணை வேண்டும்…?

போன்ற கோஷங்களை தாங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நின்றதை காண முடிந்தது.