Home முக்கிய செய்திகள் கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை ரத்து உறுதியாகவில்லை – குழப்பத்தில் மகிந்த குழு!

கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை ரத்து உறுதியாகவில்லை – குழப்பத்தில் மகிந்த குழு!

143
0

2019ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில்- மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30 வரையான காலப்பகுதியில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியல் நேற்று அமெரிக்க இராஜாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அப் பட்டியலில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாமையால் ஜனாதிபதி வேபாளராக கோத்தபாய நிற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தனது அமெரிக்க குடியுரிமை துறப்பு ஆவணம், மே 3ஆம் நாள் அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டதாகவும்,  ஏப்ரல் 17ஆம் நாளில் இருந்து, அமெரிக்க குடியுரிமை பெற்றவராக கணிக்கப்படமாட்டார் என்றும், கோத்தாபய ராஜபக்ச முன்னர் கூறியிருந்ததோடு, இது தொடர்பான ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், அமெரிக்க அரசாங்கத்தின் பதிவாளர் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் விபரங்கள் அடங்கிய , முதலாவது காலாண்டு பட்டியலிலோ, அன்றி இரண்டாவது காலாண்டுக்கான பட்டியலிலோ கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை.

இதனால் அவர் தொடர்ந்தும் அமெரிக்க குடியுரிமை கொண்டவராகவே கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை இழப்பு உறுதி செய்யப்படாததால், சிக்கலை எதிர்கொண்டுள்ளது.