
கொழும்பில் பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியின் மூலம் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று (14/08) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.