Home செய்திகள் செஞ்சோலைப் படுகொலையின் 13ம் ஆண்டு நினைவு இன்று:

செஞ்சோலைப் படுகொலையின் 13ம் ஆண்டு நினைவு இன்று:

96
0

செஞ்சோலை வளாகத்தில் விமானக் குண்டுவீச்சு மூலம் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று படுகொலை இடம்பெற்ற அதே இடத்தில் காலை 7.05 மணிக்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் மற்றும் பொதுமக்கள் இணைந்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளை பராமரிக்கும் சிறந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. அதில் செஞ்சோலை வளாகத்தில் பெண் பிள்ளைகளும், காந்தரூபன் அறிவிச் சோலையில் ஆண் பிள்ளைகளுமென இரு வேறு பிரிவுகளாக கல்வி, விளையாட்டு, கலை, கைத்திறண் என அனைத்தும் வழங்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்திருந்தன.

கடந்த 14.08.2006 அன்று சிறீலங்கா விமானப்படையினரின் செஞ்சோலை வளாகம் மீது மேற்கொண்ட குண்டு வீச்சுத்தாக்குதலில் 61 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டமை இங்கு நினைவுகூரத்தக்கது..