Home செய்திகள் எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது கோட்டபாயவுக்கே தெரியும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது கோட்டபாயவுக்கே தெரியும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

135
0

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அவரது குடும்பத்தினருக்குமே எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

எனவே எமது உறவுகள் தொடர்பான விடயங்களை வெளியிடவேண்டிய கடப்பாடு ராஜபக்ஷ குடும்த்தினர் ஒன்றுகூடியுள்ள பொதுஜன பெரமுன கட்சிக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்தார்.

எமது பிள்ளைகள், உறவுகள் தொடர்பான விபரங்கள் உள்ளடங்கலான உறுதியான வாக்குறுதியை வழங்குபவர்களுக்கே நாம் வாக்களிப்போம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகள் தெரிவித்துள்ளன.

அத்தோடு இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் இருந்த பதாகை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

கோட்டபாய ராஜபக்சவும், சஜித் பிறேமதாசவும் பணப்பெட்டிகளை திறந்து வைத்திருப்பது போன்றும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் யாரிடம் பணம் இருக்கு என கேட்க சஜித் பிறேமதாசவிடம் பணத்தை வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் என எம்.ஏ.சுமந்திரன் கூறுவது போன்றும் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையே அது என்பது குறிப்பிடத்தக்கது.