Home தாயக செய்திகள் யாழில் மோதிக்கொண்ட சிங்கள மாணவர்கள்!

யாழில் மோதிக்கொண்ட சிங்கள மாணவர்கள்!

116
0

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு வெளியில் சிங்கள மாணவர்கள் இரு வேறு குழுக்களாகப் பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட முரண்பாடு நேற்றும் நீடித்த நிலையிலேயே இம் மோதல் இடம்பெற்றுள்ளதாக அறியவந்துள்ளது.

நேற்று மாலை 4:00 மணியளவில் இடம்பெற்ற இம் மோதல்களில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். எனினும், இச் சம்பவத்தின் போது அங்கு பணியில் இருந்த இராணுவத்தினர் மாணவர்களின் மோதலைத் தடுக்க முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பரமேஸ்வராச் சந்தி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக சிங்கள மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் புகுந்த சிங்கள மாணவர்கள் சிலர் அங்கும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் இடம்பெற்றதால், அதில் தலையீடு செய்யாத பல்கலைக்கழக நிர்வாகம் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.