Home தாயக செய்திகள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நல்லூர் கந்தன் திருவிழா இன்று ஆரம்பம்:

பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நல்லூர் கந்தன் திருவிழா இன்று ஆரம்பம்:

139
0

இலங்கையின் – வடபகுதியில் அமைந்துள்ள யாழ் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்றம் இன்று இடம்பெற்றது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்கள் உட்பட வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்ளும் கோயிலாக நல்லூர் கந்தசுவாமி கோயில் இருப்பதால் அதிகளவான காவல்துறையினரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஈஸ்ரர் தினக் குண்டுத் தாக்குதலின் பின்னரான பதட்ட நிலை காரணமாக குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் நல்லூர் கோயிலுக்குச் செல்லும் நாலாபுறமும் உள்ள வீதிகளில் பாரிய கொட்டகைகளை அமைத்து அதனூடாக தீவிர சோதனையின் பின்னர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்று ஆரம்பித்துள்ள திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதோடு, எதிர் வரும் 29ம் திகதி தேர்த் திருவிழாவும், 30ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.