
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தைச் சூழ பாதுகாப்பு கடமைகளுக்காகவென சிறீலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளைய தினம் (06/08) நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் கொடியேற்றலுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் குற்றத்தடுப்புப் பிரிவு, போக்குவரத்துப்பிரிவு, புலாய்வுப்பிரிவு என காவல்துறையினரின் பல பிரிவுகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் இன்று (05) காலை முதல் ஆலய வீதியில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.