Home செய்திகள் குளங்களின் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆளுநர் சுரேன்:

குளங்களின் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆளுநர் சுரேன்:

144
0

காலநிலை மாற்றத்தினை தாக்குபிடிக்கும் ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ கருத்திட்டத்தின் கீழ் வவுனியாவில் அபிவிருத்தி செய்யபட்டு வரும் குளங்களை வடமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் இன்று (05) பார்வையிட்டார்.

குறித்த திட்டத்தின் கீழ் கடந்தவருடம் 14 குளங்கள் வவுனியாவில் புனரமைப்பு செய்யப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளபட்டிருந்தது.

இந்த நிலையில், குளங்களின் அபிவிருத்தி தொடர்பான அதன் முன்னேற்பாடுகளை ஆராய்வதற்காக இன்றையதினம் வவுனியா – மதகுவைத்த குளத்திற்கு சென்ற வடமாகாண ஆளுனர் சுரேன்ராகவன் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டிருந்ததுடன் ஏனைய சில குளங்களையும் சென்று பார்வையிட்டார்.