
வெலிக்கடைச் சிறைச்சாலையின் தலைமை சிறைக்காவலர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
நேற்று இரவு அம்பலாங்கொட, கூலிகொட பகுதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலேயே அவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.