
நோர்வேயில் இருந்து இலங்கை வந்த சேதுவை யாழ், நெல்லியடியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி நீதிமன்றத்தில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வழக்கிலேயே, சேது கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருக்கு நெருக்கமான இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் குறித்த பிரமுகருக்காக தேர்தல் பரப்புரைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தவர் என தெரியவந்துள்ளது.
நெருங்கிய உறவினர் ஒருவரின் சுப நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக யாழ் வந்த சேது கைதான நிலையில், அவரை விடுவிப்பதற்கு, மேற்படி பிரமுகர் பல தரப்புக்கள் ஊடாகவும் நேற்றிரவு முயற்சித்ததாகத் தெரியவருகின்றது.