Home செய்திகள் விமானத்தின் முன்னோடி இராவணனே…! மறுக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை அரசு தெரிவிப்பு!!

விமானத்தின் முன்னோடி இராவணனே…! மறுக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை அரசு தெரிவிப்பு!!

264
0

“முதன்முதலில் விமானத்தை பயன்படுத்தி வானில் பறப்பதற்கு இராவணன் தான் முன்னோடி என்பதை நீருபிக்க தங்களிடம் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதாகவும்,. இலங்கையின் பலம் மிக்க முன்னாள் அரசனான இராவணன் ஒரு மிகப்பெரிய மேதை என்பதோடு அவர் ஒரு விமானி, இது புராணக் கதையல்ல, உண்மைச் சம்பவம். என இலங்கை விமானப் போக்குவரத்து துறை துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு விரிவான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றது. எனவே இராவணன் பழங்காலத்தில் பயன்படுத்திய முறைகள் என்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்தவுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் தாங்கள் அந்த உண்மையை நிரூபிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு கட்டுநாயக்கவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை விமானப் போக்குவரத்து துறை துணை தலைவர் இதனை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமானப்போக்குவரத்து நிபுணர்கள், வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புவியலாளர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

இதேவேளை, சமீப காலமாக இலங்கையில் பண்டைய மன்னர் இராவணனை குறித்த புதிய ஆர்வம் நிலவி வருகிறது. அண்மையில், இலங்கை தனது முதல் விண்வெளி பயணத்தில் இராவணா என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.

இலங்கையின் பெரும்பாலான மக்கள் இராவணன் ஒரு கருணைமிக்க அரசன் எனவும் ஒரு அறிஞர் என்றும் கருதுகின்றனர். சில இந்திய வேதங்கள் கூட அவரை மகா பிராமணர் அல்லது பெரிய அறிஞர் எனவும் கூறுவதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.