Home செய்திகள் டெங்கு அபாயம் – இரு நாட்களுக்கு மேல் காச்சல் நீடிப்போரை சிகிச்சை பெறுமாறு எச்சரிக்கை!

டெங்கு அபாயம் – இரு நாட்களுக்கு மேல் காச்சல் நீடிப்போரை சிகிச்சை பெறுமாறு எச்சரிக்கை!

192
0

அண்மையில் பெய்த மழையை அடுத்து டெங்கு குடம்பிகள் நுளம்பாக மாறி தாக்கும் அபாயம் காணப்படுவதால் இரு தினங்களுக்கு மேல் காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவ மனையில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணியகத்தினர் அறிவித்துள்ளனர்.

தென்மராட்சி பிரதேசத்தில் நாவற்குழி கிழக்கு, மந்துவில், மட்டுவில், சாவகச்சேரி நகரம் போன்ற பிரிவுகளில் தொடர்ச்சியாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.