Home செய்திகள் இன்று முதல் கொழும்பிலிருந்து யாழிற்கு புதிய தொடரூந்து சேவை:

இன்று முதல் கொழும்பிலிருந்து யாழிற்கு புதிய தொடரூந்து சேவை:

179
0

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய தொடரூந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

4081 என்ற இலக்க தொடரூந்து நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். தொடரூந்து நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும் எனவும், 4087 இலக்க தொடரூந்து நாளாந்தம் கொழும்பு கோட்டையில் மாலை 7.15ற்கு புறப்பட்டு யாழ். தொடரூந்து நிலையத்தை மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்றடையும். எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, 4082 என்ற இலக்க தொடரூந்து நாளாந்தம் யாழ். தொடரூந்து நிலையத்தில் இருந்து காலை 6.25 க்கு புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தை வந்தடையும். என இலங்கை தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது