Home செய்திகள் அவசரகாலச் சட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்:

அவசரகாலச் சட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்:

116
0
இலங்கை பாராளுமன்றம்

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் அங்கீகரித்துள்ளது. 

அவசரகாலச்சட்டத்தை நீடித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழுக்கு அனுமதி அளிக்கும் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ் விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவசரகாலச்சட்டத்தைப் பயன்படுத்தி தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டியதோடு, நேற்று மாலையே சபையில் வாக்கெடுப்பு நடத்துமாறும் அவைத் தலைவரை கேடுக்கொண்டார்.

இதையடுத்து நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவசரலகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக, 2 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதனால் பெரும்பான்மை வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தமை இங்கு குறீப்பிடத்தக்கது.