Home செய்திகள் தென்னிலங்கை பட்டதாரிகள் 16 ஆயிரம் பேருக்கு இன்று நியமனம்!

தென்னிலங்கை பட்டதாரிகள் 16 ஆயிரம் பேருக்கு இன்று நியமனம்!

125
0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று பகல் 12.00 மணிக்கு 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதில் 16,000 க்கும் அதிகமானவர்கள் தென்னிலங்கைச் சேர்ந்த சிங்களவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீதம் உள்ள 800 பேரில் 700 க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம் பட்டதாரிகள் எனவும், எஞ்சிய 100 பேரே தமிழ் பட்டதாரிகள் எனவும் அவர்களும், தென்னிலங்கை மற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக வடக்கு, கிழக்கில் தமிழ் பட்டதாரிகள் பல்லாயிரம் பேற் வேளையற்று இருப்பதும், தொடர் போராட்டங்களை நடாத்தி வருவதும் தெரிந்ததே. இந்த நிலையில் அண்மையில் தொகுதி தொகுதியாக சில நூற்றுக் கணக்கானவர்களுக்கு மாத்திரம் நியமனங்களை வழங்கிய பெளத்த பேரினவாத ஆட்சியாளர்கள் தற்போது 16000 சிங்களவர்களுக்கு ஒரே நேரத்தில் நியமனங்களை வழங்குவது சுட்டிக்காட்டத்தக்கது.