Home செய்திகள் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் சடலங்கள் கிளிநொச்சியில் மீட்பு!

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் சடலங்கள் கிளிநொச்சியில் மீட்பு!

91
0

கிளிநொச்சி – ஜெயந்திநகர் பகுதியில் உள்ள வீடொன்றின் உள்ளே இருந்து இரத்தக் காயங்களுடன் இரு சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதுடைய விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் ஆகிய இருவரது சடலங்களுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.