Home செய்திகள் 2018/2019 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு 30,830 மாணவர்கள் தெரிவு:

2018/2019 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு 30,830 மாணவர்கள் தெரிவு:

114
0

2018/2019 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு 30,830 மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  

இதற்கிணங்க உயிரியல் விஞ்ஞானத்துறைக்காக 6,992 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப் படவுள்ளதுடன் பௌதீக விஞ்ஞானத்துறைக்காக 5,684 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அதேவேளை, வர்த்தகத் துறைக்காக 6,015 மாணவர்களும் கலைத்துறைக்காக 9,399 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  

இதற்கமைய மேற்படி பாடநெறிகள் சம்பந்தமான ‘இஸட்’ வெட்டுப்புள்ளி விபரங்களை உயர் கல்வி அமைச்சின் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ருஹூணு பல்கலை கழகத்தின் இரு பீடங்கள் மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அதனடிப்படையில் ருஹூணு பல்கலைகழகத்தின் மனிதவளம் மற்றும் சமூக அறிவியல் பீடங்கள் மீண்டும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.  

அத்துடன் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் இறுதி ஆண்டின் கல்வி நடவடிக்கைகளும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.  

முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் இரண்டாம் வருட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதுடன் முதலாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் விரைவில் அறிவித்தல் வழங்கப்படுமெனவும் ருஹூணு பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.  

இதேவேளை, பேராதனைப் பல்கலைகழகத்தின் முகாமைத்துவ பீடம் இன்று திறக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.  

அதன்படி முகாமைத்துவ பீட மாணவர்கள் நேற்று 28ம் திகதி பல்கலைக்கழக விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.