Home செய்திகள் யாழ் – நாகவிகாரையில் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர்:

யாழ் – நாகவிகாரையில் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர்:

128
0

ஹம்பாந்தோட்டை  பாராளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர்  இன்று (29/07) காலை 10:00 மணியளவில்  யாழ்-நாகவிகாரைக்கு விஜம் மேற்கொண்டதோடு, விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீ விமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று கொண்டனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீ பொதுஜ‌ன‌ பெர‌முன‌ க‌ட்சி யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள்  உடனிருந்தனர்.

மேலும் இன்று   யாழ் ஆயர் இல்லம் , நல்லூர் ஆதின குரு முதல்வர்,   முஸ்லிம் மக்கள் தரப்பு , விளையாட்டு கழகங்கள் , யாழ் வணிகர் கழகம் என்பவற்றுடன் சந்திப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடமராட்சியில் அங்கஜனின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில்  மக்கள் மன்றம் ஒன்றும்  நாமல் ராஜபக்ஷவினால் இன்று அங்குரார்பணம் செய்யப்படவுள்ளதாம்.