Home செய்திகள் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் – இறுதி முடிவிற்கான முக்கிய பேச்சுவார்த்தை இன்று:

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் – இறுதி முடிவிற்கான முக்கிய பேச்சுவார்த்தை இன்று:

145
0

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை  இன்று நடைபெறுகிறது. 

திருமண வயது, மணப்பெண்ணின் சம்மதம், பெண் காதி நீதவான் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இன்று முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வேளை, ஜூலை 11ஆம் திகதி இணக்கம் காணப்பட்ட பரிந்துரைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சிக்கக் கூடாது என பெண்கள் குழுக்களின் கூட்டணி கடந்த வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி வலியுறுத்தியிருந்தது.

பரிந்துரைகளின் அடிப்படையில் உண்மையான மற்றும் நீடித்திருக்கக் கூடிய மறுசீரமைப்புக்களைச் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அக்கூட்டணி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.