
கொழும்பு, கொஹுவல, ஜம்புகஸ்முல்ல மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மர்மநபர்களின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
உடுஹமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ரணவக்க சுசில் ருவன் பெரேரா என்ற அந்த வாகனத்தின் சாரதியும், அதில் பயணம் செய்த 40 வயதான நபருமே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.