Home செய்திகள் தீர்வு விடயத்தில் பேரம் பேசும் அதிகாரத்தை ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி இல்லாது செய்துவிடும்: கஜன்

தீர்வு விடயத்தில் பேரம் பேசும் அதிகாரத்தை ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி இல்லாது செய்துவிடும்: கஜன்

140
0

சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி, தமிழர்களுக்கானத் தீர்வு விடயத்தில் பேரம் பேசும் அதிகாரத்தை இல்லாது செய்துவிடும் என்ற நோக்கில்தான் தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைவதற்கு தாம் பின்வாங்கியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவருக்கு பின்னர் தலைமைப்பொறுப்பு கஜேந்திரகுமாருக்கே என தெரிவித்திருந்ததோடு, அதனை எழுத்து மூலமும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தலைமைப் பதவி எமக்கு முக்கியமல்ல. தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் பேரம் பேசுவதுதான் முக்கியம். அதுவே எமக்கு தேவை.

ஆனால் பேரம் பேசுவதற்கு சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினர் பொருத்தமானவர்கள் அல்லர்” என மேலும் தெரிவித்தார்.