Home செய்திகள் சிவபூமி அரண்மனை விசமிகளால் உடைப்பு!

சிவபூமி அரண்மனை விசமிகளால் உடைப்பு!

117
0

யாழ்-நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள சிவபூமி அரண்மனை கடந்த இரவு விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நாவற்குழியில் பெளத்த விகாரை திறக்கப்பட்டதன் பின்னராக நடைபெற்ற இச் சம்பவம் சிங்கள பெளத்த பேரினவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழர்களை அச்சுறுத்துவதும், தமிழர் அடையாளங்களை சிதைப்பதும் சிங்கள பெளத்த பேரினவாதிகளின் முதல்கட்ட நகர்வாகவும், அதனூடாக தமிழர்களின் இருப்பை அப்பகுதியில் குறைத்து சிங்களக் குடியேற்றங்களை விஸ்த்தரிப்பதுமே நடைமுறையாக இருந்துவருவதை கடந்த காலங்கள் எடுத்துணர்த்தி நிற்பது இங்கு குறிப்பிடத்தக்கது.