
யாழ் பல்கலைக்கழகத்தில் ‘கறுப்பு ஜுலை’ தமிழ் இன அழிப்பை நினைவுகூறும் முகமாக தமிழ் மாணவர்கள் தற்பொழுது மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கான தடைகள், நெருக்கடிகள் போன்றவற்றைக் கடந்து, திடீரென்று தன்னிச்சையாக மாணவர்கள் திரண்டுள்ளனர்.
இதேவேளை, இந்த நிகழ்வு தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் அங்கு காவல்துறையினரோ அன்றி அதிரடிப்படையினரோ குவிக்கப்படலாம் என்றும் என்றும் மாணவர்கள் மீது அவசரகாலச் சட்ட நடைமுறையை காரணம் காட்டி அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்புக்கள் உளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இவ் ஒன்றுகூடல் யார் அழைப்பும் இன்றி மாணவர்களாகவே வாழ்வில் மறக்க முடியாத கறுப்பு நாளை நினைவுகூர்ந்து ஒன்று கூடியிருப்பதால் சட்டச்சிக்கல்கள் வராது என நம்பப்படுகிறது.


