
மட்டக்களப்பு மாவட்டத்திதின் அத்திப்பட்டி பிரதேசத்தில் ஆயுதங்களுடன் மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு – ஏறாவூர் அத்திபட்டி பிரதேசத்தில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமாக மூவர் தங்கியிருப்பதாக எறாவூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும், அதற்கான 16 தோட்டாக்கள் மற்றும் வாள் என்பவற்றுடன் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 30 மற்றும் 34 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.